7 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை

ஈரோடு, ஜன. 7:   பொங்கல் பண்டிகையையொட்டி 7 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் என 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி 7 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 12ம் தேதி அனுமன் ஜெயந்தி, 13ம் தேதி போகி பண்டிகை, 14 பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் 18ம் தேதி ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி முதல் மீண்டும் மஞ்சள் மார்க்கெட் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More