29பேருக்கு கொரோனா

ஈரோடு, ஜன. 7:  ஈரோடு மாவட்டத்தில் நேற்று  29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,880 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 9பேர் நேற்று குணமடைந்து  வீடு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 13,450 பேர்  குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து  மாவட்டத்தில் மொத்தம் 285 பேருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து  வருகின்றனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை 145 பேர்  உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>