போக்சோவில் வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மன். இவரது மகள் அகல்யா (17). (பெயர்கள் மாற்றம்). செங்கல்பட்டில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்தார். கடந்த 31ம் தேதி  வேலைக்கு சென்ற அகல்யா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசில், பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு அடுத்த வல்லம் நாவிதர் நகரை சேர்ந்த விமல்ராஜ் (25) என்பவர், சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையொட்டி கடந்த 3ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், மதுராந்தகம் அருகே தேவாத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த விமல்ராஜை பிடித்தனர். அவருடன் இருந்த சிறுமியை மீட்டு, தாம்பரம் பெண்கள் விடுதியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார், சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட விமல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>