வேலூர், நவ.21: வேலூர் உட்பட 8 துணை போக்குவரத்து ஆணையர் பதவி உயர்வு பெற்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றிய 8 பேருக்கு, போக்குவரத்து துணை ஆணையராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்விவரம்: பழனிவேலு, சென்னை மாநில துணை போக்குவரத்து துணை ஆணையராகவும்-1, வெங்கட்ரமணி விருதுநகர் துணை போக்குவரத்து ஆணையராகவும், யுவராஜ் சென்னை மாநில துணை போக்குவரத்து ஆணையராகவும்-2, சக்திவேல் திருநெல்வேலி போக்குவரத்து துணை ஆணையராகவும், சம்பத்குமார் வேலூர் போக்குவரத்து துணை ஆணையராகவும், மாதவன் திருச்சி போக்குவரத்து துணை ஆணையராகவும், தாமோதரன் ஈரோடு போக்குவரத்து துணை ஆணையராகவும், தரன் விழுப்புரம் போக்குவரத்து துணை ஆணையராகவும் பதவி உயர்வு அளித்து அரசு செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, வேலூர் சரக போக்குவரத்து துணை ஆணையராக சம்பத்குமார் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆர்டிஓ சுந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் வேலூர் போக்குவரத்து துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ள சம்பத்குமார், ஏற்கனவே வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
