×

பெரும்புதூர் போலீசார் சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்க வாட்ஸ்அப் குழு: ஐஜி துவக்கி வைத்தார்

பெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுத்திட வாட்ஸ்அப் குழு துவங்கப்பட்டுள்ளது. இதனை, ஐஜி நாகராஜ் துவக்கி வைத்தார் பெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் பெரும்புதூர் காவல் நிலையம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில், ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தற்போது போலீசார், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை தடுக்க கிராம குழு அமைத்து, அவர்களது எண்களை இணைத்து வாட்ஸப் குழு உருவாக்க முடிவெடுத்துள்ளனர்.இதன் துவக்கமாக பெரும்புதூர் காவல் நிலைய கட்டுபாட்டில் உள்ள கட்சிப்பட்டு கிராமத்தில் வாட்ஸ்அப் குழு துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் கலந்து கொண்டு, வாட்ஸ்அப் குழுவை துவக்கி வைத்தார். அப்போது, கிராமத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் தடுக்கும் நடவடிக்கையாக போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இந்த வில்லேஜ் விஜிலன்ஸ் கமிட்டி என்ற குழுவை அமைத்து, அதன் மூலம் வாட்ஸ்அப் குழு உருவாக்கி குற்ற சம்பவங்களை பதிவு செய்து நேரடியாக காவல்துறை வடக்கு மண்டல ஐஜிக்கு அனுப்பி வைக்கபடும் என தெரிவிக்கப்பட்டது. இதில், டிஐஜி சாமுண்டீஸ்வரி, எஸ்பி சண்முகப்பிரியா, பெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர். இதே போல் மாம்பாக்கம் கிராமத்தில் கிராமத்திலும் வாட்ஸ்அப் குழு துவக்க விழா நடந்தது.

Tags : IG ,குழுWhatsapp ,Perumbudur ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...