விருதுநகரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜன.7: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 11 ஆயிரம் செவிலியர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜேசு டெல்குயின்

தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 2015ல் தேர்வாணைய போட்டி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 13 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இரண்டு வருட ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில், 6

வருடங்களாகியும் 2 ஆயிரம் செவிலியர்களை மட்டும் காலமுறை ஊதியத்திற்கு மாற்றி உள்ளனர். 11 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையிலேயே பணியில் உள்ளனர். பணி நிரந்தர கோரிக்கையை பலமுறை வைத்தும் அரசு

செவிசாய்க்கவில்லை. இதனை கண்டித்து ஜன.11ல் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, சென்னை ஆகிய 5 மண்டலங்களில் உண்ணாவிரதம் போராட்டமும், ஜன.28ல் சென்னை டிஎம்எஸ் அலுவலத்தில் தர்ணா போராட்டம் நடத்த

போவதாக தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சசிகலா, அமுதலட்சுமி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>