×

ஜனவரி மாதம் வரை 3 மாத காலத்திற்கு சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்ல வசதியாக 30 சிறப்பு ரயில்கள் இயக்கம்: டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுகோள்

சேலம்: சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்ல வசதியாக வரும் ஜனவரி மாதம் வரையில் 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்களில் முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், நடப்பாண்டும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இப்பக்தர்களின் பயணத்திற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்குகின்றனர்.

குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் இருந்து அதிகப்படியான ஐயப்ப பக்தர்கள், யாத்திரை மேற்கொள்வதால், இம்மாநிலங்களில் இருந்து அதிகப்படியான சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. இந்தவகையில் தற்போது இந்த 4 மாநிலங்களில் இருந்தும் 30 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளனர். இந்த சிறப்பு ரயில்கள், வரும் ஜனவரி மாதம் வரை தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு சிறப்பு ரயிலும், 5, 10, 14 ரயில் சேவைகளை வழங்குகிறது.

இதன்படி, சென்னை எழும்பூர்-கொல்லம் (06111), கொல்லம்-சென்னை எழும்பூர் (06112), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06113), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06114), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06119), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06120), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06127), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06128), சென்னை சென்ட்ரல்-கொல்லம் (06117), கொல்லம்-சென்னை சென்ட்ரல் (06118), ஹூப்ளி-கொல்லம் (07313), கொல்லம்-ஹூப்ளி (07414), மசூலிப்பட்டணம்-கொல்லம் (07101), கொல்லம்-மசூலிப்பட்டணம் (07102), மசூலிப்பட்டணம்-கொல்லம் (07103), கொல்லம்-மசூலிப்பட்டணம் (07104), நரசாபூர்-கொல்லம் (07105), கொல்லம்-நரசாபூர் (07106), சார்லப்பள்ளி-கொல்லம் (07107), கொல்லம்-சார்லப்பள்ளி (07108) ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல், காக்கிநாடா டவுன்-கோட்டயம் (07109), கோட்டயம்-காக்கிநாடா டவுன் (07110), நான்டெட்-கொல்லம் (07111), கொல்லம்-நான்டெட் (07112), சார்லப்பள்ளி-கொல்லம் (07113), கொல்லம்-சார்லப்பள்ளி (07114), சார்லப்பள்ளி-கொல்லம் (07115), கொல்லம்-சார்லப்பள்ளி (07116), விசாகப்பட்டணம்-கொல்லம் (08539), கொல்லம்-விசாகப்பட்டணம் (08540) ஆகிய சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த 30 சிறப்பு ரயில்களையும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இதர பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெரும்பாலான சிறப்பு ரயில்கள், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியே செல்கின்றது. அதிகாலை முதல் இரவு வரையில் தொடர்ந்து இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களில் பக்தர்கள், முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Ayyappa ,Sabarimala ,Salem ,Railway Administration ,Kerala ,Ayyappa… ,
× RELATED மத்திய அரசு வழங்கிய மானியத்தை...