×

சிவகாசியில் ஆட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களால் ஆபத்து

சிவகாசி, ஜன. 7:  சிவகாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் தரம் உயர்த்தப்பட்டு போக்குவரத்து அலுவலர் அலுவலமாக செயல்பட்டு வருகிறது. சிவகாசி நகரில் போக்குவரத்து அலுவலர் வாகனச்சோதனை பணிகளில் சரிவர ஈடுபடுவதில்லை என்ற புகார் உள்ளது. இதனால் பட்டாசு ஆலை தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் அழைத்து செல்வது தொடர்கிறது. இதே போல் லோடு ஆட்டோக்களில் ஆட்களை அழைத்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. சிவகாசி மீனம்பட்டி அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்த வேன் கவிழ்ந்து தீப்பிடித்து 4 பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கு பின் போக்குவரத்து ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு விதி மீறும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது குறைந்தது. ஆனால் தற்போது போலீசார், போக்குவரத்து அலுவலர் ஆட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களை கண்காணிப்பதில் மெத்தனமாக உள்ளனர். இதனால் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது போன்ற வாகனங்கள் விபத்தில் சிக்கினால் போலீசார் கடும் குற்றப்பரிவில்  வழக்குப்பதிவதில்லை. மேலும் சரக்கு வாகனங்களில்  ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது போன்ற காரணங்களால்  சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது அதிகரித்து வருகிறது. போலீசார், போக்குவரத்து அலுவலர்கள் இந்த வாகனங்களை கண்காணித்து நடடிவக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து