சுகாதார வளாகம், ரேஷன் கடை கட்ட பூமி பூஜை சாத்தூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ராஜபாளையம், ஜன. 7:  ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியான சத்திரப்பட்டி பகுதியில் ரூ. 9லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் மற்றும்  கீழகுன்னக்குடி பகுதியில் ரூ.9.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை  சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாடசாமி, ராஜ்குமார் கலந்து கொண்டனர். ரேஷன் கடை கட்ட 4 ெசன்ட் நிலத்ைத வழங்கிய பாஜவை சேர்ந்த திருநாவுக்கரசுக்கு எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.

Related Stories:

>