செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

திருச்சுழி, ஜன.7: திருச்சுழி அருகே சாமிநத்தம் பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக வட்டாட்சியர் தன்ராஜூக்கு தகவல் கிடைத்தது. இதன்  அடிப்படையில் சாமிநத்தம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது சாமிநத்தம் பகுதியில் அனுமதியின்றி ஜேசிபி மூலம் டிப்பர் லாரியில் செம்மண் அள்ளியுள்ளனர். வருவாய்த்துறையினரைக் கண்டவுடன் செம்மண் அள்ளிய நபர்கள் லாரியை விட்டு விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் திருட்டுத்தனமாக செம்மண் அள்ளிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர். மேலும் செம்மண் அள்ளப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு திருச்சுழி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Related Stories:

>