×

பால் வியாபாரி போக்சோவில் கைது

தேனி, ஜன.7: தேனி அருகே வடபுதுப்பட்டி ஜேஜே காலனியை சேர்ந்தவர் சர்க்கரை மகன் அஜித்(22). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஒரு  பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடந்த 30ம் தேதி கடத்திச் சென்றார். மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என அல்லிநகரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார்  வழக்குப் பதிவு செய்து அஜித்தை பிடித்து விசாரித்ததில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜித் மீது அல்லிநகரம் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ