காவிரி குடிநீர் கிடைக்கவில்லை மக்கள் சபையில் குற்றச்சாட்டு

பரமக்குடி, ஜன.7: பரமக்குடி நகர் 25வது வார்டு காட்டுபரமக்குடி கிராமத்தில் திமுக சார்பில், அதிமுகவை நிராகரிப்பும் என்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டபம் ஊராட்சி மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் தலைமை தாங்கினார். பரமக்குடி மேற்கு நகர செயலாளர் சேது கருணாநிதி கிராமசபை கூட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், மக்களுக்கு எதிரான அதிமுகவின் திட்டங்கள் குறித்து பேசினார். நகர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மும்மூர்த்தி, வேலவன், ஜானகிராமன், கலீல் ரகுமான், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 25வது வார்டு கிளைச் செயலாளர் செல்லப்பாண்டி வரவேற்றார். கூட்டத்தில் பேசிய பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முறையாக கிடைக்காமல் திண்டாடி வருகின்றோம். தற்போது சாலைகள் முறையாக போடாததால் தொடர்ந்து பெய்த மழைக்கு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

காட்டுப் பரமக்குடியில் புதிதாக உருவாகியுள்ள தெருக்களுக்கு சாலை வசதி மற்றும் மின்சார வசதி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், ‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து அமோக பெற செய்யுங்கள். உங்களுடைய புகார்கள் தீர்மானங்களாக வரும் தேர்தலில் கொண்டுவரப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.

அதிமுகவை நிராகரிப்போம் திமுகவை ஆதரிப்போம் என்ற கோஷத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களிடம் குறைகளை மனுக்களாக பெற்றனர்.

Related Stories:

>