×

கொரோனா பரவும் ஆபத்து 100 சதவீதம் இருக்கையுடன் தியேட்டர் திறக்க கூடாது சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தொண்டி, ஜன.7:  கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தியேட்டர்கள் அடைக்கப்பட்டது. மீண்டும் 50 சதவீத இருக்கையுடன் திறக்கப்பட்டது. பொங்கல் முதல் 100 சதவீத இருக்கையுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகம், தியேட்டர் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் கடைகள் திறப்பட்டது. இந்நிலையில் இன்று வரையிலும் பள்ளிகள் திறக்க வில்லை. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்ட 50 சதவீத மக்களுடன் நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி அளித்தது. இதனால் மத வழிபாடுகள், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் வரும் பொங்கல் முதல் தியேட்டர்கள் 100 சதவீத இருக்கையுடன் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தற்போது ஓரளவு கட்டுக்குள் இருககும் வைரஸ் பரவல் இது போன்ற நிகழ்வால் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.


சமூக இடைவெளி மற்றும் முகக்கவசத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும் அரசு, ஒரு அறைக்குள் 3 மணி நேரத்திற்கு மேல் அதிகமானோரை  அடைத்து வைத்தால் எப்படி வைரஸ் பரவாமல் இருககும். எனவே  தியேட்டர்கள் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமுக ஆர்வலர் ஜீப்ரி கூறியது, தற்போது தான் கொரோனா பரவலும் அதனால் பலியாவோர் எண்ணிககையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் லண்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து புதிய வடிவில் உறுமாற்றம் அடைந்து மேலும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. இதையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் தியேட்டர் திறப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒன்று சேர்வதால் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் குறிப்பிட்ட இடத்தில் அனைவரையும் அடைத்து வைப்பது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் பெரும் கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்துள்ள வைரஸ் பரவலை தீவிரமடைய செய்யும் விதமாக இருப்பதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தியேட்டர்கள் திறப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

Tags : activists ,theater ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...