ராமேஸ்வரத்தில் சாலை மறியல்

ராமேஸ்வரம், ஜன.7:  டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று ராமேஸ்வரத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நேற்று ராமேஸ்வரத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி ராமேஸ்வரம் மேலத்தெருவில் இருந்து சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் ஊர்வலமாக சென்றவர்கள் திட்ட குடி நான்கு முனை சந்திப்பு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>