×

டி.கல்லுப்பட்டி அருகே மக்கள் கிராம சபை கூட்டம்

பேரையூர், ஜன. 7: டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மணிமாறன் பேசுகையில், ‘இங்குள்ள நெசவாளர்கள் குடியிருப்பில் சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. கட்டிய வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. மொத்தத்தில் இங்குள்ள நெசவாளர்கள் குடும்பங்களை நிராகரித்து விட்டனர். எனவே வரும் தேர்தலில் அதிமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்’ என்றார். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் மூக்கையா, தகவல் தொழில்நுட்ப அணி பாசபிரபு, ஒன்றிய நிர்வாகி முத்துகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Village Council ,D.Kallupatti ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...