தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை

கொடைக்கானல், ஜன.7: கொடைக்கானல் டிப்போ கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜா மகள் சந்தியா(15). ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சந்தியா கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் இவர் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை இவரது தாய் மேக்ஸி கண்டித்தார். இதனால் மனமுடைந்த மாணவி சந்தியா நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மாணவியின் தாய் மேக்ஸி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>