×

உணவு வழங்கிய திமுகவினர்

நத்தம், ஜன.7: திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி பிறந்தநாள் விழா நத்தத்தில் கொண்டாடப்பட்டது. நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் தலைமையில் முல்லை நகர் பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். தொடர்ந்து நத்தம் மாரியம்மன் கோயில், பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றில் ஐ.பெரியசாமி பெயரில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் பஸ் நிலைய பகுதிகளில் இனிப்புகள் வழங்கினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், முன்னாள் ஒன்றிய பொருளாளர் வீரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், மாவட்ட பிரதிநிதிகள் இஸ்மாயில், கதிரவன், துரைமுருகன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல் மஜீத், துணை ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி செல்வம், மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி தாஸ், நிர்வாகிகள் அயூப்கான், கார்த்திக், மலைப்பூசாரி, மாயழகன், சுப்பிரமணி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி