×

ஐ.பெரியசாமி பிறந்தநாள் விழா திமுக நலத்திட்ட உதவி வழங்கல்

குஜிலியம்பாறை, ஜன.7: குஜிலியம்பாறை ஒன்றிய மற்றும் பேரூர் திமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பிறந்த நாள் விழா நேற்று குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். குஜிலியம்பாறை அருகே டி.கூடலூரில் நடந்த விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திமுக கொடி ஏற்றப்பட்டது. இதேபோல் குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகளிலும், பாளையம் பேரூராட்சி பகுதிகளிலும் திமுக கொடியேற்றபட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, சவுந்தர்மாரியப்பன், ராஜ்குமார், மணிவண்ணன், சுரேஷ், கார்த்திக், ராஜேஸ்வரி, ராஜமாணிக்கம், சசி, கவியரசன், தனுஷ்கண்ணன், பிரதீப், சுரேஷ், சந்தோஷ், ஹரி, நயினார், சோலை ஹரி, நாகராஜ், மணிகண்டன், மணிமாறன், அரவிந்த், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ