×

அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் 5ம் ஆண்டு விழா கொடியேற்றம்

கொடைக்கானல், ஜன.7: கொடைக்கானல் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தின் 5ம் ஆண்டு விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தின் 5ம் ஆண்டு விழா நேற்று மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு பங்குத்தந்தை அருட்தந்தை பீட்டர் சகாயராஜா தலைமை தாங்கினார். சிறப்பு திருப்பலியை செண்பகனூர் திருஇருதய கல்லூரியின் பொருளாளர் இயேசு சபை அருட்தந்தை  சேவியர் அமலதாஸ், பெருமாள் மலை பங்குத்தந்தை பிரிட்டோ பாக்கியராஜ், அருட்தந்தை ரிச்சர்டு மற்றும் இயேசு சபை குருக்கள்  தேவதாஸ் ஆகியோர் வழி நடத்தினர். இதை அடுத்து குழந்தை இயேசு திரு உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. கொடியை இயேசு சபை குருக்கள், பங்குத்தந்தை பீட்டர் சகாயராஜா இணைந்து ஏற்றி திருவிழாவை தொடக்கி வைத்தனர். விழாவில் பங்கு மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நாளும் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் நவநாள் திருப்பலி பூஜைகள் நடைபெறும்.

Tags : Wonderful Baby Jesus Temple ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...