×

கலெக்டர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஜன.7: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கலா முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வி விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் சித்ரா மற்றும் செவிலியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்யும் எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பலன்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவம் மற்றும் மகப்பேறு சிகிச்சை சேவை செய்யும் செவிலியர்களுக்கு மகப்பேறு காலம் மற்றும் உடல்நலம் சரியில்லாத நேரத்தில் கூட ஒப்பந்த செவிலியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எந்த விடுப்பும் அதற்கான பலன்களும் கிடைக்கவில்லை. இவற்றை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டதில் வலியுறுத்தினர்.

Tags : Nurses ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...