காடையம்பட்டி, டிச.31: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே வேப்பிலை ஊராட்சியில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக மாணவரணி ஒன்றிய பொருளாளர் வேடிச்செல்வன் தலைமை வகித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த பகுதியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதனையடுத்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ₹10ஆயிரம் மதிப்புள்ள சீருடைகள், வாலிபால், பேட், நெட் உள்ளிட்ட உபகரணங்களை, காடையம்பட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் விஜயன் வழகினார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர் சித்தன், ஒன்றிய கவுன்சிலர் வேடியப்பன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய தலைவர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர் இருதய செல்வம், வினோத், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.