கோயில் உண்டியல் திறப்பு

நாமக்கல், ஜன.7: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு  நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்  செய்தனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, கோயில் வளாகத்தில் 2  உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இந்நிலையில்,  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில்  நடந்தது. கோயில் ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உண்டியல் காணிக்கையை  எண்ணினர். இதில், பக்தர்கள் காணிக்கையாக ₹1 லட்சத்து 85 ஆயிரத்து 730  செலுத்தியிருந்தனர்.

Related Stories:

>