மறியலில் ஈடுபட்ட 49 பேர் கைது

பள்ளிபாளையம், ஜன.7: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்மை சட்டங்களை நிபந்தனையின்றி திரும்ப பெற வலியுறுத்தி, பள்ளிபாளையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வங்கி கிளை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட சிஐடியூ தொழிற்சங்க துணைத்தலைவர் அசோகன் தலைமை தாங்கி பேசினார். சங்க நிர்வாகிகள் படைவீடு பெருமாள், மோகன், அங்கமுத்து, முத்துகுமார் உள்ளிட்டோர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>