×

ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு


பரமத்திவேலூர், ஜன.7: பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ஸ்வாகத் மற்றும் வர்ஷா ஆகியோர்,   விளையாட்டு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். மாணவி வர்ஷா தமிழகத்தில் மூன்றாமிடம் பெற்று, சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியிலும், மாணவர் ஸ்வாகத் 6ம் இடம் பெற்று தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளி கல்வி துறை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் வாழ்த்தினர். மேலும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சம்பூரணம் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினர்.

Tags : RN Oxford School ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு