பள்ளிபாளையம், ஜன.7: திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழியின் பிறந்தநாள் விழா, நாமக்கல் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பூங்கோதை செல்லதுரை தலைமை தாங்கினார். மகளிர் அணியினர் ஆலாம்பாளையம் ஆனந்தமலர் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு இனிப்பு, அசைவ உணவு வழங்கப்பட்டது. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவிமோகன், வர்த்தகரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.