இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

ஓசூர், ஜன.7: ஓசூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அமைப்பாளர் காதர்பாஷா தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் சைய்யத் இலியாஸ் வரவேற்றார். இதில், தேசிய இணைச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ அப்துல் பாசித், வாணியம்பாடி நகர செயலாளர் முஹமத் நஹீம், மாநிலத் துணைத் தலைவர் ஹசன் ஜாக்கிரிய்யா, தேசிய மண்டல செயலாளர் முகமத் பஷான் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் எம்எல்ஏ அப்துல் பாசித் கூறுகையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொது கூட்டங்களை நடத்தி, திமுக கூட்டணி வெற்றிக்கு தேர்தல் பணியாற்றும் என்றார்.

Related Stories:

>