×

ஜாக்டோ -ஜியோ அமைப்பு அடையாள வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம்

நாகப்பட்டினம், நவ. 19: ஜாக்டோ -ஜியோ சார்பில் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர், சரவணன், ராஜராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் வளர்மாலா,, மாவட்டத் தலைவர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத் தலைவர் ரமேஷ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரமேஷ், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் செங்குட்டுவன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் சித்திரா காந்தி, மருத்துவ ஆய்வுக்கூட நுட்பனர் சங்க மாநில துணைத் தலைத் தலைவர் ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிதிக் காப்பாளர் காந்தி நன்றி கூறினார்.

 

Tags : JACTO-GEO ,Deserted Highways Department ,Nagapattinam ,Nagapattinam Government Employees Union ,Sridhar ,Saravanan ,Rajarajan ,Tamil Nadu Government ,Employees Union State ,Secretary… ,
× RELATED பெல் நிறுவன பிரிவுகளுக்குள்...