மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு காஸ் ஸ்டவ்

கிருஷ்ணகிரி, ஜன.7: ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு பணியாளர்களுக்கு, ₹14.20 லட்சம் மதிப்பில் காஸ் ஸ்டவ் புத்தாண்டு பரிசாக வழங்கப்பட்டது. இதுகுறித்து ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் கூறியதாவது: ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யவும், சேமிப்பு, கடன் போன்றவற்றை மேலாண்மை செய்வதில் பணியாளர்கள் பங்கு அளப்பரியது. முறையாக பயிற்சி பெற்று ஐவிடிபி நிறுவனத்தின் 74 கிளை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள், 4 மாவட்டங்களில் உள்ள 14 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை மேற்பார்வை செய்து, அக்குழுக்கள் முறையாக இயங்குவதை உறுதி செய்கின்றனர். இவ்வாறு அர்ப்பணிப்புடன் பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பணியை பாராட்டியும், புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில், பணியாளர்கள் அனைவருக்கும் ₹14.20 லட்சம் மதிப்பில் 3 பர்னர்கள் கொண்ட எல்பிஜி காஸ் அடுப்பு பரிசாக வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>