மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு

கடத்தூர், ஜன.7: கடத்தூர் பேரூராட்சியில், மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 11வது வார்டு வீரகவுண்டனூரில் ₹23.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய், ₹7.80 லட்சம் மதிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை, ₹20 லட்சம் மதிப்பில் கல்லாற்றில் தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பணிகளை விரைவில் முடிக்க அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் முருகன், ஷாநவாஷ், அலுவலக பணியாளர்கள் செந்தில், மாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>