×

பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட கட்டிமேடு அரசு பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கல்

திருத்துறைப்பூண்டி, ஜன.7: பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளிக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாகச் செயல்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கல்வி மாவட்ட அளவில் ஒரு பள்ளிக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அதிக நன்கொடை பெற்று பள்ளி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதிக பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆலோசனைக் கூட்டங்களில் போதிய உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின்படி திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்துறைப்பூண்டியில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் காமராஜ் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல்முனாப், தலைமையாசிரியர் பாலு ஆகியோரிடம் வழங்கினார். இதில் துணைத்தலைவர் அருளானந்தசாமி, பொருளாளர் பக்கிரிசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை சிஇஓ ராமன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன், பார்த்தசாரதி, கட்டிமேடு ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன், பள்ளி புரவலர் தண்டபாணி ஆகியோர் பாராட்டினர்.

Tags : Parent Teacher Association ,Kattimedu ,
× RELATED எழிலூர் அரசு பள்ளி ஆண்டு விழா