×

திருவாரூர், குடவாசல், பேரளத்தில் மத்திய அரசை கண்டித்து சிஐடியூவினர் மறியல்

திருவாரூர், ஜன.7: மத்திய அரசை கண்டித்து திருவாரூர், குடவாசல் மற்றும் பேரளத்தில் சிஐடியூவினர் நடத்திய மறியல் போராட்டத்தில் 110 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும். புதிய மின் மசோதா திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். கொரோனா நிவாரண தொகையாக அனைவருக்கும் ரூ.7,500 வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தத்தை கைவிட வேண்டும் மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன்பாக சிஐடியூ தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் துணைத் தலைவர் பழனி மற்றும் பொறுப்பாளர்கள் அனிபா, கருணாநிதி, மோகன் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல் குடவாசலில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி சங்க ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடந்த மறியலில் 35 பேரும், பேரளம் கடைத்தெருவில் மத்திய சங்க மாவட்ட துணை செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் நடந்த மறியலில் 25 பேர் என மொத்தம் 3 இடங்களிலும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 110 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : protest ,CITU ,Thiruvarur ,Kudavasal ,Peralam ,Central Government ,
× RELATED அர்ஜெண்டினாவில்...