தஞ்சை, ஜன.7: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் மே மாதம் தொகுதி-2 முதல்நிலை தேர்விற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. எனவே இப்போட்டித்தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் இளைஞர்கள் பெருவாரியாக பயன்பெற ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் இலவச பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது. வரும் 9ம் தேதி முதல் சிறப்பு வல்லுநர்களை கொண்டு நடைபெறும் இப்பயிற்சியில் இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும். இலவச மாதிரி தேர்வுகள், விளக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் 81109 19990 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லதுstudycircletnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களது பெயர், முகவரி, பிறந்ததேதி, கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்புமாறு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.