×

வெற்றி விகாஸ் பதின்ம பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.19: தர்மபுரி மாவட்டம், மோளையானூர் வெற்றி விகாஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கைப்பந்து, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடமும், மாணவிகள் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து பிரிவில் முதலிடமும், மேலும் மாணவர்கள் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான எறிபந்து பிரிவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் வேணு மற்றும் பள்ளியின் இயக்குநர்கள், தாளாளர் நைனான், மேலாளர் கனி, முதல்வர் கலைவாணி, உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Victory Vikas Pedhinma School ,Pappireddipatti ,Victory Vikas Pedhinma Higher Secondary School ,Molaiyanur ,Dharmapuri district ,
× RELATED ஓய்வூதியர் தின விழா