கல்லணை அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஜன.7: தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே ஒரத்தூர் மாதா கோயில் பகுதியை சேர்ந்த பிளஸ்1 படிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் தோகூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில் கடம்பங்குடி தெற்கு தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என்ற வாலிபருடன் சிறுமி அடிக்கடி பேசி வந்ததாக தெரியவந்தது. தொடர் நடவடிக்கையில் போலீசாருக்கு திருப்பூரில் இருவரும் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து. இது தொடர்பாக போலீசார் அங்கு சென்று இருவரையும் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்தனர். சிறுமிக்கு 15 வயது என்பதால் ஆசை காட்டி கடத்தி சென்றது, மைனர் பெண்ணை கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் தேவி, போக்சோ சட்டத்தில் ரஞ்சித்தை கைது செய்தார்.

Related Stories:

>