வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி சிஐடியூவினர் சாலை மறியல் போராட்டம்

தஞ்சை, ஜன.7: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 3 விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட, சிஐடியூவினர் 81 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 3 விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மாற்றி அமைத்ததை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ சார்பில் தேசம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெற்ற மறியலுக்கு சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பேர் நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ராஜாராமன், விரைவுப் போக்குவரத்து சங்கம் செங்குட்டுவன், சுமைப்பணி சங்கம் முருகேசன், மீன்பிடித் தொழிலாளர் சங்கச் செயலாளர் சுப்பிரமணியன், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் மில்லர் பிரபு, தரைக்கடை சங்க மாவட்ட பொருளாளர் ராஜா, ஒப்பந்த தொழிலாளர்களை சங்கச் செயலாளர் ஜெய்பிரகாஷ், இஞ்சினியரிங் சங்கம் ராமலிங்கம், மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் ஆனந்த் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 3 விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சாரச் சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மாற்றி அமைத்ததை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆற்றுப் பாலத்தில் இருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் பேரணிக்கு அனுமதி கிடையாது என ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர் , இதையடுத்து 81 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>