தலைமை அலுவலகத்தை காலிசெய்ய கூறியதை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்

புதுக்கோட்டை, ஜன.7: மாநில தலைமை அலுவலகத்தை முன் அறிவிப்பின்றி அதிகாரிகள் காலி செய்ய கூறியதை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மண்ணடியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி காலி செய்ய கூறியதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இதுநாள்வரை உரிய வாடகை தொகை செலுத்தி அலுவலகத்தை நடத்தி வந்த நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி அதிகாரிகள் உடனடியாக தங்களது தலைமை அலுவலகத்தை காலி செய்ய சொல்லியதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories:

>