பணி நிரந்தரம் செய்ய கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன.7: ஒப்பந்த பணியில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் நாச்சாரம்மாள் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜபருல்லா, மாவட்ட செயலர் ரெங்கசாமி, செவிலியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர். அனுநந்தனா, பொருளாளர் பொ. அனுசுயா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர். மாநிலம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 11 ஆயிரம் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வரும் 11ம் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதப் போராட்டங்களும், 28ம்தேதி சென்னையில் தர்ணா போராட்டமும் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>