அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நேர்முக தேர்வு

அரியலூர், ஜன.7: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முக தேர்வு கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. நடப்பு நிதி ஆண்டிற்கு 2 கால்களும் பாதிக்கப்பட்டு 2 கைகளும் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முக தேர்வில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகள் ரூ.4 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்ககூடிய சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ பொருட்களை கலெக்டர் ரத்னா வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>