பள்ளியில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், ஜன.7: ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உருமாறி வரும் கொரோனாவின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் அசோகன் தலைமை வகித்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் தாமோதரன், அற்புதசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் வேல்மணி, தற்போது 2ம் கட்டமாக உருமாறி வரும் கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாகப் பரவும் அபாயம் இருப்பதால் குழந்தைகளையும், பெற்றோர்களையும், முதியோர்களையும் பாதுகாக்கும் வகையில் அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து பெற்றோர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கீதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலையரசி, கிராம கல்விக்குழு தலைவர் சுப்பிரமணியன், புரவலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியை வளர்மதி வரவேற்றார். ஆசிரியை முத்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Related Stories:

>