×

செந்துறை அருகே தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள் 3 ஆண்டுகளுக்கு பின் சம்பா நடவு

அரியலூர், ஜன.7: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தில் கடந்த 3 வருடங்களாக பாசன ஏரியில் போதிய நீர் பிடிக்காத காரணத்தால் வயல்களில் மக்காச்சோளம், கம்பு போன்றவற்றை பயிர் செய்து வந்தனர்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 400 ஏக்கர் கொள்ளளவு கொண்ட பெரிய ஏரி நிரம்பியதால் அப்பகுதி மக்கள் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல்களில் சம்பா நடவு பணி செய்ய விவசாயிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வயல்களை இறங்கி வேலை செய்து வருகின்றனர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சொந்த உழைப்பில் நெல் அறுவடை செய்ய போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு நாற்று நடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நடவு வேலை கிடைத்திருப்பதால் பெண்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி நடவு நட்டு வருகின்றனர்.

Tags : lakes ,Sendhurai ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!