×

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. வ.உ.சி. பெயரில் 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. அவர்களின் சிலை திறப்பு அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது. கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி. அவர்களின் 150-ஆவது ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயர் சூட்டபட்டுள்ளது. வ.உ.சி. அவர்களின் 85-ஆவது நினைவு நாள் ‘தியாகத் திருநாள். தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றபட்டுள்ளது. வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி தொடக்கம். வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலர் மற்றும் மடிப்பேடு வெளியீடு. வ.உ.சி. அவர்கள் எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 1908 திருநெல்வேலி எழுச்சி-க்கு நினைவுச் சின்னம் அறிவிப்பு!

எனத் தம் உயிரையும் உணர்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான வஉசி அவர்களின் பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுகிறேன்! வாழ்க வ.உ.சி.

 

Tags : Sekhidradtha Cemmal ,U. ,Mu. K. Stalin ,Chennai ,Kapalotiya Tamil ,U. C. ,Kindi Gandhi Hall Campus ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...