போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை துவக்கம்

பெரம்பலூர், ஜன.7: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற் றும் குரூப்- 2 ஏ போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (8ம் தேதி) துவங்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இல வசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்- 2 ஏ போட்டித்தேர்வுக்கான இல வச பயிற்சி வகுப்புகள் நா ளை (8ம்தேதி) துவங்கிற து.இந்த வகுப்புகள் பகல் 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் . இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தேர்வர்கள் 949905 5913என்ற வாட்ஸ்அப் எண் ணிலோ அல்லது நேரிலோ வந்து பெயரினை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>