×

சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் காயிதே மில்லத் விருது

சென்னை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் இந்தாண்டுக்கான சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், வழக்கறிஞர் சஃபியா நிஜாமுதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், சுல்பிகர் அலி, ஷபீக் அஹமது, வழக்கறிஞர் ராஜா முகம்மது, டாக்டர் சேக் மீரான், பசீர் சுல்தான், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன், மாவட்ட தலைவர்கள் இஸ்மாயில், ஹுசைன், ரஷீத், சீனி முகமது, சலீம், பிலால் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, நக்கீரன் கோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் காயிதே மில்லத் விருது ஆல் இந்தியா மில்லி கவுன்சில் தலைவர் இப்னு சவூத்துக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது- ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, தந்தை பெரியார் விருது- மறைந்த அருட் தந்தை ஸ்டேன்சாமி, காமராஜர் விருது-அகரம் ஃபவுண்டேஷன் கல்வி அறக்கட்டளை, கவிக்கோ விருது- ஜே.எம்.கே. அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி, பழனிபாபா விருது- தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர்- கோவை கு.ராமகிருட்டிணன், நம்மாழ்வார் விருது- இயற்கை விவசாயி சா.காதர் மீரான், அன்னை தெரசா விருது- மருத்துவர் அனுரத்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டது….

The post சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் காயிதே மில்லத் விருது appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Periyar ,CHENNAI ,STBI ,Dinakaran ,
× RELATED “என் தற்கொலைக்கு குடும்பத்தினரே...