×

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டது. இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.இதையடுத்து தமிழகத்தில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (18/11/25) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (18/11/25) புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

Tags : Cuddalore ,Viluppuram ,Puducherry ,Karaikal ,Chennai ,Southwest Bank Sea ,Sri Lanka ,
× RELATED வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு...