×

தில்லையாடியில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு சேதமான தொகுப்பு வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்ட வேண்டும்


தரங்கம்பாடி, ஜன.7: மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டிதர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது தில்லையாடியில் உள்ள சிவன்கோவில் வளாகத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியபொறுப்பாளர் அப்துல்மாலிக் தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தேசப்பன் சிறப்புரையாற்றினார். செம்பனார்கோவில் ஒன்றியக்குழுதலைவர் நந்தினிதர், துணைதலைவர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்விஜெயராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரபியாநர்கீஸ்பானு, துளசிரேகா, ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட பிரதிநிதிகள் மணிமாறன், இளங்கோவன், மாவட்ட விவசாய அணிஅமைப்பாளர் கருணாநிதி, ஊராட்சி தலைவர் பைலட், இளைஞர்அணி அமைப்பாளர் செந்தில், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தில்லையாடியில் 40 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்தவீடுகள் இப்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. அந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். முதியோர் உதவி தொகையை 1000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். கூட்டுறவு அங்காடிகளில் தரமான அரிசி வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராமசபை கூட்டத்தையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த அதிமுகவை நிராகரிப்போம் என்ற பேனரில் பெண்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

Tags : houses ,set houses ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...