குளித்தலையில் ெவள்ளிக்கிழமை இயங்கி வந்த வாரச்சந்தையை திறக்க வேண்டும்

குளித்தலை, ஜன.7: குளித்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்தனர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது குளித்தலையில் இயங்கிவந்த வெள்ளிக்கிழமை வாரசந்தை கொரோனோ தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 10 மாத காலமாக மூடப்பட்டு உள்ளது .என்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வாரச் சந்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் குளித்தலை வாரச்சந்தை மட்டும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் குளித்தலை சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குளித்தலை நகராட்சி நிர்வாகம் உடனடியாக வெள்ளிக்கிழமை வார சந்தையை திறந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் அதற்கு எழுதிய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வரும் 19ம்தேதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் .முத்துச்செல்வன் தலைமையில் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகம் வந்தடைந்து கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories:

>