×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க எதிர்பார்த்த விலைக்கு கரும்புகளை அரசு கொள்முதல் ெசய்யவில்லை

க.பரமத்தி, ஜன.7: கரூர் வேலாயுதம்பாளையம் சுற்று பகுதியில் விளையும் செங்கரும்புகளை அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க விவசாயிகள் எதிர்பார்த்த அளவு விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்ய முன் வராததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கரூர் ஒன்றியம் வேலாயுதம்பாளையம் இதன் சுற்று பகுதிகளான நொய்யல், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், சேமங்கி, புங்கோடைகுளத்துப்பாளையம், நல்லிக்கோயில், மறவாபாளையம், வேட்டமங்கலம், கவுண்டன்புதூர், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் தை பொங்கலுக்காக கரும்பு சாகுபடி அதிகமாக செய்யப்பட்டு வருகிறது.
இவற்றை ஜனவரி 15ம் தேதி, தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதையொட்டி அறுவடை செய்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் ஒரு ஏக்கர் செங்கரும்பு நடவு செய்ய ரூ.3லட்சம் முதல் ரூ.3.60லட்சம் வரை செலவாகிறது. தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் கரும்புக்கு உரிய விலை கிடைக்க அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பலரும் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், கரும்பானது 10 மாதம் பயிரான செங்கரும்பு ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய, விதை கரணை என ரூ.40முதல் ரூ.70ஆயிரத்திற்கு வாங்க வேண்டும். உழவு நடவு என ரூ.25ஆயிரம், மொத்தம் களையெடுப்பு ரூ.78 ஆயிரம், 4 முறை சோகை உரிப்பு ரூ.68 ஆயிரம், 5 முறை உரம் ரூ. 99ஆயிரம், நடப்பாண்டில் போதிய மழை பெய்யாதால் தண்ணீர் பாய்ச்சிய செலவு ரூ. 60ஆயிரம் என உத்தேசமாக ரூ.3லட்சம் முதல் ரூ.4.50லட்சம் வரை தரத்திற்கு ஏற்ப செலவாகிறது.

10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700 முதல் ரூ.900வரை அல்லது தரத்திற்கு ஏற்ப விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும். ஒரு கரும்பு 6 அடிவரை உயரம் இருக்கும். ஒரு கட்டுக்கு 10 கரும்புகள் வீதம் ஒரு ஏக்கருக்கு சுமார் 2 ஆயிரம் கரும்புகள் அறுவடை செய்யவேண்டும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை பொய்த்ததால் தண்ணீர் பாய்ச்சுவதில் அதிக சிரமத்தை சந்தித்தோம். இதனால் அதிகளவு செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு, குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பொருட்களுடன் ஒரு செங்கரும்பு வழங்கியது.

இதனால் அரசு நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தது. அதேபோல் இந்த ஆண்டும் விவசாயிகளிடம் நியாயமான, கட்டுபடியாக விலைக்கு அரசு கரும்பு கொள்முதல் செய்யும் என்ற நோக்கில் கரும்பு சாகுபடி செய்தோம். தற்போது அறுவடை நேரத்தில் ஒரு பயனாளிக்கு ஒரு கரும்பு அளவே பெறப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவு கரும்புகளை அரசு கொள்முதல் செய்யவில்லை குறைந்த அளவே பெறப்பட்டுள்ளன. வரும் காலங்களில் விதை பொருட்களின் விலை, சாகுபடி செலவு, உரம், மருந்துகளின் விலை, இதை கருத்தில் கொண்டு விளைபொருட்களுக்கு இடைதரகர்களிடமிருந்து விவசாயிகளை கரும்பு விலையை அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : government ,Marxist ,
× RELATED திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ.வை...