விவசாயிகள் மகிழ்ச்சி அரவக்குறிச்சி பகுதியில் செல்போனில் ேபசியவாறு வாகனங்கள் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு விபத்து ஏற்படும் முன் தடுக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, ஜன. 7: அரவக்குறிச்சி பகுதியில் செல்போனில் பேசியபடியே வாகணங்கள் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். செல்போனில் பேசியபடியே வாகணங்கள், ஓட்டுதல் மது போதையில் ஓட்டுதல் ஆகிய போக்குவரத்து விதி மீறல்களால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகின்றது. இரண்டு சக்கர வாகனத்தல் வருபவர்கள், பள்ளிவாகனம் ஓட்டுபவர்கள், காரில் வருபவர்கள் என சகட்டு மேனிக்கு செல்போனில் பேசும் கவனத்தில் வாகனத்தின் வேகம் அதிகரித்து அதிவேகமாக வருகின்றனர். அரவக்குறிச்சியில் தாராபுரம் ரோடு, கடைவீதி, புங்கம்பாடிகார்னர், பள்ளபட்டிரோடு அரசு மருத்துவமனை அருகில், பள்ளபட்டியில் பஸ்நிலைய வளைவான ரோடு, திண்டுக்கல் ரோடு, ஷாநகர் கார்னர் என் மக்கள் அதிக நடமாட்டமுள்ள பகுதிகளில் செல்போனில் பேசியபடியே வாகனங்கள் ஓட்டுகின்றனர்.

இந்நிகழ்ச்சி இப்பகுதியில் சகஜமான ஒன்றாக உள்ளது. இவர்களின் அலட்சிய போக்கால் விபத்து ஏற்பட்டு சாலையில் எதிரே இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள், நடந்து வருபவர்கள் என அப்பாவிகளின் உயிரிழப்பு அல்லது படுகாயம் ஏற்பட காரணமாகின்றது. தற்போது இதனால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால், நேரடியாகச் சென்று மோதுதல் என சிறு சிறு விபத்துகள் தினமும் நடைபெறுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நகருக்குள் பெரும் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதிகமாக இதில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் விதியை மீறி செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுபவர்களை கண் காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டு என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>