×

ெதன்னிலை அருகே மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

க.பரமத்தி, ஜன.7: தென்னிலை அருகே செம்மாண்டாம்பாளையம் பகுதியில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த பெண்ணை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த தென்னிலை பெண் தலைமை காவலர் விஜயாவை பொதுமக்கள் பாராட்டினர். .
கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை அருகேயுள்ள செம்மாண்டாம்பாளையம் பிரிவு பகுதியில் 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அரை குறை ஆடையுடன் போக்குவரத்துக்கு இடையூறாக ஆதரவற்று உண்ண உணவின்றி சுற்றிக்கொண்டிருந்தார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தென்னிலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தென்னிலை பெண் தலைமை காவலர் விஜயா அப்பகுதிக்கு சென்று மனநலம் பாதித்து சுற்றி திரிந்த பெண்ணுக்கு உணவு மற்றும் உடை கொடுத்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தார். உடனே காப்பகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு காப்பக நிர்வாகிகளிடம் மனநலம் பாதித்த பெண்ணை எஸ்.ஐ ரங்கநாதன், தலைமையில் பெண் தலைமை காவலர்கள் விஜயா, மகாலட்சுமி ஒப்படைத்தனர். பெண்ணை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த தென்னிலை எஸ்.ஐ ரங்கநாதன், பெண் தலைமை காவலர் விஜயா ஆகியோரை க.பரமத்தி இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் தென்னிலை ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Tennilai ,
× RELATED கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்...