கரூர் அரசு காலனி பிரிவு சாலையில் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

கரூர், ஜன. 7: கரூர் அரசு காலனி பிரிவுச்சாலை பிரிவுப் பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து நெரூர், சோமூர், திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைவரும் வாங்கல் சாலையில் சென்று, அரசு காலனி பிரிவுச் சாலையின் வழியாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், பிரிவுச் சாலையில் மூன்று வழிப்போக்குவரத்து நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு காலனி பிரிவுச் சாலையோரம் வாகன ஓட்டிகளின் நலன் கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories:

>